india

img

யாரும் வாங்காவிட்டால், தானாகவே விலை குறையும்.... பெட்ரோல் விலையை உயர்த்துவதுதான் சரி.. மோடிக்கு ம.பி. மாநில அமைச்சரும் பாராட்டு...

போபால்:
சூரிய சக்தி மின்சாரத்தை நோக்கி மக்களைத் தள்ளுவதன் மூலம், நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வதற்கான நடவடிக்கையில்தான் பிரதமர் மோடி ஈடுபட்டிருப்பதாக மத்தியப்பிரதேச மாநில மருத்துவக்கல்வித் துறை அமைச்சர் விஷ்வாஸ் சரங் பாராட்டியுள்ளார்.

அதாவது பெட்ரோல் - டீசல் விலை உயர்வு சரிதான் என்றும், இவ்வாறு செய்தால் மட்டும்தான் மாற்று எரிசக்தி பயன்பாட்டை நோக்கி மக்கள் செல்வார்கள் என்பது போன்றும் விஷ்வாஸ் சரக் பேசியுள்ளார்.“சூரிய சக்தியை போக்குவரத்து வாகனங்களுக்கு பயன்படுத்துவதன் மூலம், சர்வதேச சந்தையில் எண்ணெய் விலைகளை கட்டுப்படுத்த பிரதமர் ஏற்பாடுகளை செய்திருக்கிறார். மின்சார வாகனங்களைக் கொண்டுவருவது தொடர்பான மோடியின் முடிவு, எண்ணெய் விலையை கட்டுக்குள் வைக்க உதவும்” என்று அமைச்சர் சரங் கூறியிருக்கிறார்.

மேலும், “தேவை மற்றும் விநியோகம் ஆகியவையே உலக சந்தையில் விலைகளை தீர்மானிக்கிறது என்பதால், தேவையை குறைத்தால் விலைகளின் மீது கட்டுப்பாடு இருக்கும்” என்று கூறியுள்ள சரங், “பிரதமர் மோடியும் இதனால்தான் மின்சார வாகனங்களை கொண்டு வர முடிவு செய்துள்ளார். இதன்மூலம் எண்ணெய் விலையை கட்டுப்படுத்த முடியும்” என்று தெரிவித்துள்ளார்.

;